சென்னை:

முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றுவிப்பாளருமான பேரறிஞர் அண்ணாவின்  51வது நினைவு தினம் இன்று தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, சென்னையில்  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்றுகாலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடந்தது.

இந்த பேரணியில் தி.மு.க பொருளாளார் துரைமுருகன், முதன்மை செயளாலர் கே.என்.நேரு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ஏராளமான திமுக தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

மெரினா கடற்கரையில்  உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும்  மரியாதை மரியாதை செலுத்தினார்கள்.