காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார் வினேஷ்சிவன். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கின் றனர். அதன் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் புதிய படம் ஒன்றுக்கு வீடியோ காலில் டப்பிங் பதிவு செய்திருக்கிறார் விக்னேஷ்.
சமீபத்தில் அஞ்சலி, கல்கிகொச்சலின் ஆகியோரை வீடியோகாலில் அழைத்தார் விக்னேஷ்சிவன். கல்கியும், அஞ்சலியும் அதில் பேசிக் கொண்டிருகின்றனர். பின்னர் இருவரிடமும் விக்னேஷ் சிவன் பேசுகிறார். கொரோனா தனிமைப்படுத் தல் நேரத்தில் வீடியோ காலில் டப்பிங் பேசிக்கொடுத்ததற்கு நன்றி என்று இருவருக்கும் விக்னேஷ் சிவன் நன்றி சொல்கிறார்.
குறும்படத்துக்கா, வெப்சீரிஸுக்கா எந்த படத்திற்காக விக்னேஷ் சிவன் இவர்களின் டப்பிங் பதிவு செய்தார் என்பதை சொல்லவில்லை.