சென்னை:
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவ மாணவிகள் மத்தியில் கொந்தளிப்பபை ஏற்படுத்தியுள்ளது.
அனிதாவின் தற்கொலையை தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது. இப்போது மாணவி அனிதாவின் தற்கொலை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என தகவலும் வெளியாகியுள்ளது. இதையயடுத்து சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel