சென்னை:
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசராணை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைகப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாகவும் மற்றும் பணமோசடி வழக்கு அவர்மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அவர்மீதான சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிற்து.
அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்த மனுவில் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.