சென்னை:

நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக அந்தவழியே போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

அனிதா சாவுக்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து,  சென்னையில் தலைமை செயலகத்தை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட முயற்சி செய்து வருகின்றனர். தீ

வுத்திடல் அருகே உள்ள சாலை வழியே வந்து தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி செய்து வருகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் சாரை சாரையாக தலைமை செயலகம் நோக்கி செல்கின்றனர்.

தலைமை செயலகத்தை  முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பாரிமுனையில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி வரும் வாகனங்களுக்கு காவல்துறை தடைவிதித்துள்ளது. போராட்டம் நடக்கவுள்ளதாக வெளியான தகவலால் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.