கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

திரையுலகினர் சமூகவலைத்தளத்தில் தற்போது பிசியாக உள்ளனர் . அந்த வகையில் நேற்று இசையமைப்பாளர் அனிருத் கிட்டத்தட்ட இரண்டை மணிநேரம், யூடியூப் லைவில் தனது ரசிகர்கள் கேட்ட பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

தன்னிடம் சிறிய கீபோர்ட் தான் தற்போது இருக்கிறது. அதனால் எல்லாப் பாடல்களையும் பாட முடியாது என்று தொடங்கினார் அனிருத். ‘வை திஸ் கொலவெறி’யுடன் ஆரம்பித்தார்.

தனது தெலுங்கு மொழிப் பாடல்களின் ரசிகர்களுக்காக ‘அக்ஞாதவாசி’, ‘ஜெர்சி’ ஆகிய படங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்துப் பாடினார்.

இரண்டரை மணிநேரமும் அனிருத் தனது இசை மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு, அவர்கள் வீட்டிலேயே உற்சாகம் தந்தார் என்பதை மறுக்க முடியாது.

[youtube-feed feed=1]