ஆக்ரா:
ஆக்ராவில் விலங்கின் கொழுப்புகளை பயன்படுத்தி போலி நெய் செய்தவர்கள் கைது செய்யபட்டனர்.
ஆக்ராவின் கன்டெளலி பகுதியில் விலங்குகளின் கொழுப்புகள், எலும்புகள் மற்றும் கொம்புகள் நெய் செய்ய பயன்படுத்தப்பட்டதை உத்தரப்பிரதேச போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தொழிற்சாலையில் இரவில் சோதனை செய்த போலீசார் விலங்குகளின் எலும்புகள், கொம்புகள் மற்றும் கால்களுடன் 100 கிலோ போலியான நெய்யை கண்டெடுத்துள்ளனர்.
இது தவிர, அந்த தொழிற்சாலையில் விலங்குகளின் எலும்பு மற்றும் கொழுப்புகளை நெய்யாக மாற்ற பயன்படுத்தப்பட்ட பல வகையான ரசாயனங்களையும் காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு எதிரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இறைச்சி கூடமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனையின்போது 2 பேர் தப்பி ஓடினர், ஷஃபி, இர்ஷத், தாஹிர் மற்றும் தொழிற்சாலையின் உரிமையாளர் சந்த் பாபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விலங்கின் கொழுப்புகளை பயன்படுத்தி செய்யும் இந்த நெய் உற்பத்தியின் மொத்த செலவு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 23 ஆகும், ஆனால் இந்த தொழிற்சாலையில் விலங்கு கொழுப்புகளுடன் செய்த நெய்யில் டால்டாவை கலந்து ஒரு கிலோவை 200 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
இந்த தகவல்கள் கிடைத்ததும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்து நெய்யின் மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
இதையடுத்து அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.