டெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகினார்.

இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே செயல்பட்டுவந்தார். இவரது பதவி காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டு வந்தது.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிரோபி போட்டிக்கு அனில்கும்ப்ளே பயிற்சியாளராக தொடருவார் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் அனில்கும்ப்ளேவுக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியல் இருந்து அனில்கும்ப்ளே இன்று விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரி்ல் விளையாட இந்திய கிரிக்கெட் வீரர்கள் புறப்பட்டனர். ஆனால் எதிர்பார்த்தது போல பயிற்சியாளர் கும்ளே இந்திய அணியுடன் செல்லவில்லை.

“ஐசிசி.,யில் நடக்கும் முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் தான் கும்ளே செல்லவில்லை” என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால கும்ளே இது குறித்து வாய்த்திறக்கவில்லை. இந்த நிலையில் அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாக உள்ளன.