சென்னை: அங்கன்வாடி பணியாளர்களுக்கான சலுகைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி 15ம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்தப்போவதாக தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப் பாளர் மு.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பேரணியாக சென்று சந்தித்து அவருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை வருகிற எப்ரல் 15ம் தேதி செலுத்த உள்ளோம்.
அத்துடன், கலைஞரின் ஆட்சி காலத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வாரி வழங்கிய சலுகைகளை நினைவூட்டும் வண்ணம் இந்த பேரணியானது, கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு, கோட்டையை நோக்கி தாரை தப்பட்டை முழக்கத்துடன் அணிவகுக்க உள்ளது,. இதுதொடர்பான ஆலோசனை கூட்டமை, அனைத்து சங்கங்களுடனும் வரும் 6ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.