திருமணமான நடிகர் ஒருவருடன் காதல் கொண்டதால் தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளதாகவும், அதனால் சில வருடங்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும், கவிதை புத்தக வெளியீட்டில் பேசியிருந்தார் ஆண்ட்ரியா.
அந்த நடிகர் அரசியல் குடும்ப வாரிசு என்று தகவல்கள் பரவ, அவர் யார்? என பல புரளிகள் வலம் வந்தன ,
இதன் காரணமாகவே சில நாட்கள் தலைமறைவாய் இருந்த ஆண்ட்ரியா தனது காதல் விவகாரம் குறித்து முதல் முறையாக பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
”10 ஆண்டுகளுக்கு முன்பு காதலால் நான் பாதிக்கப்பட்டேன். அதை தான் அந்த கவிதை புத்தக வெளியீட்டி விழாவில் கூறினேன்.நான் கூறியதை திரித்து, நான் சொல்லாத தகவல்களை பரப்பி விட்டார்கள். அரசியல் வாரிசு நடிகர், என்றெல்லாம் கூறிவிட்டார்கள். தேவையில்லாத வதந்தி குறித்து நான் எதற்கு விளக்கம் அளிக்க வேண்டும், என்று தான் அமைதியாக இருந்துவிட்டேன்.” . என் காதல் வாழ்க்கை குறித்து பொது நிகழ்ச்சியில் பேசியது தவறு என்பதை நான் உணர்ந்துவிட்டேன் என்று கூறியுள்ளார் ஆண்ட்ரியா