விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
லாரன்ஸ் நடிக்கவுள்ள ‘அதிகாரம்’ படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். அதற்கு முன்னதாக, வெற்றிமாறன் தயாரித்து வரும் மற்றொரு படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார். இதில் ஆண்ட்ரியா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் ஆண்ட்ரியா ‘வட சென்னை’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ’ஆடுகளம்’ படத்தில் நாயகி டாப்ஸிக்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.