ஐதராபாத்: ஆந்திர கடலோரப் பகுதிகளில் வரும் 12ம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வ்ய் மையம் சனிக்கிழமை தெரிவித்தது.
இந்திய வானிலை ஆய்வு மையமானது, ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியின் யானம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் வரும் 12ம் தேதி கனமழை முதல் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், கர்நாடக மாநிலத்தின் வடக்கு மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 11, 12 ஆகிய இரு தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வடக்கு அந்தமான் கடல் மற்றும் சுற்றுப்புறங்களில் ஒரு குறைந்த அழுத்த பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது.
மேலும் மேற்கு நோக்கி – வடமேற்கு நோக்கி நகர்ந்தால், திங்கள்கிழமை காலை வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.