நோட்டுத்தடையால் ஏற்பட்ட அவலங்களை விளக்கும் வகையில் விநோதமான உடையணிந்து பாராளுமன்றத்துக்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெலுங்கு தேச எம்.பி டாக்டர் சிவப்பிரசாத் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

[embedyt] http://www.youtube.com/watch?v=UxEr8f3boXs[/embedyt]

எதிர்கட்சி எம்பிக்கள் அரசுக்கு எதிராக ஒருபக்கம் கோஷம் எழுப்பிக்கொண்டு இருக்க டாக்டர் சிவப்பிரசாத் போய் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் தமது உடை குறித்து விளக்கமளித்துக் கொண்டிருந்தார். பின்னர் பாஜக மூத்த தலைவர் அத்வானியை கரம் கூப்பி வணங்கினார். அதன் பின்னர் சமாஜ்வாடி தலைவர் முலாயமிடம் போய் கைகுலுக்கினார். இவரது உடை அனைவரையும் கவர்ந்தது. இந்த உடையை பற்றி விசாரித்த அனைவரிடமும் விளக்கமளித்தார்.

andramp

பாதி கருப்பு பாதி வெள்ளையில் இருந்த அந்த சட்டையில் வெள்ளை பகுதியில் ஏழை மக்கள் கதறி அழுவது போலவும் கறுப்பு பகுதியில் கறுப்பு பண முதலைகள் கேலியாக சிரித்துக் கொண்டிருப்பது போலவும் படங்கள் வரையப்பட்டிருந்தன. மோடியின் நோட்டுத்தடை நடவடிக்கையால் ஏழைமக்கள் துயருறுவது போலவும், பணக்காரர்கள் ஜாலியாக இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இதை விளக்கிய அவர் ஏழைமக்கள் நோட்டுத்தடையால் அவதிப்படுகிறார்கள். ஆனால் அரசுக்கு பயந்து கொண்டு அதை வெளியே சொல்லக்கூட அஞ்சுகிறார்கள். பிரதமர் மோடியின் அருகில் இருக்கும் சிலர் இந்த நடவடிக்கையை மக்கள் ஆகா ஓகோ என்று புகழ்வதாக பொய்சொல்லி பிரதமரை ஏமாற்றிவருகிறார்கள் என்று தெரிவித்தார்.
டாக்டர் சிவப்பிரசாத் ஒரு தெலுங்குப்பட நடிகருமாவார் என்பதும். பல படங்களில் ஊழல் அரசியல்வாதியாகவும் போலீசாகவும் நடித்து புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது