ஆந்திரா: 

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய ஆந்திரா பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியாக, வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை கண்டறிய வீடுவீடாக சென்று ஆய்வு செய்ய ஆந்திரா அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக 2.5 லட்சம் தன்னார்வலர்களை ஆந்திரா அரசு நியமித்துள்ளது. மேலும் இவர்கள் வீடு வீடாக சென்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை நடத்த உள்ளனர். இந்த தன்னார்வலர் குழுவினர் தற்போது ஒரு கோடியோ, 38 லட்சத்து, 58 ஆயிரத்து 747 வீடுகளுக்கு செல்ல உள்ளனர்

இந்த பிரச்சாரம் மூலம் ஆந்திர அரசு 10 ஆயிரம் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை கண்டறிய உள்ளது. இதுமட்டுமின்றி 140 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த பிப்ரவரி10-ஆம் தேதி வரை வந்தவர்களை தேட உள்ளனர்.

இந்த பிரச்சாரத்தின் போது, கொரோனா பரவலை தடுப்பதற்க்கான விழிப்புணர்வையும் இந்த தன்னார்வலர்கள் ஏற்படுத்த உள்ளனர்.
ஆந்திராவில் இதுவரை 6 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அம்மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் வருகிற 31-ந்தேதி வரை ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநில முதல்- மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட இங்கு குறைவாக உள்ளது. எனினும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஏழைகளுக்கு இலவச ரே‌ஷன் பொருட்களும், ஒரு குடும்பத்துக்கு 1000 ரூபாய் வீதம் உதவித் தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.