மராவதி

ந்திர அரசு திரைப்பட டிக்கட்டுகள் விலையை உயர்த்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் திரைப்பட டிக்கட்டுகள் விலை குறைக்கப்பட்டது.   இதனால் அதிக செலவில் எடுக்கப்படும் படங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.  இதன் அடிப்படையில் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ் இயக்குநர்கள் ராஜமவுஇ சிவா உள்ளிட்ட  ப்லர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் மீண்டும் திரைப்பட  டிக்கட் விலையை உயர்த்த முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.  அதை ஆந்திர முதல்வர் ஏற்றுக் கொண்டார்.  அதன்படி நேற்று முதல் ஆந்திர அரசு திரைப்பட டிக்கட் விலையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.  இனி சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்கங்களில் ரூ.125 ஆகவும் மல்டி ஸ்கிரீன் திரையரங்கங்களில் ரூ.150 ஆகவும் டிக்கட் விலை உயர்த்தப்ப்டுள்ளது

மேலும் 100 கோடிக்கு மேல் செலவில் தயாரிக்கப்படும் படங்களுக்கு இன்னும் அதிகமாக டிக்கட் விலையை உயர்த்த ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.  ஆனால் அந்த படங்களில் 20% படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் நடந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   அடுத்து, பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம், ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர், மகேஷ் பாபு நடிக்கும் சர்க்காரு வாரி பட்டா போன்ற படங்கள் வர உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.