விஜயவாடா:
ந்திர ஆளுநர் மாளிகையில் ஒரு தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளத. இதையடுத்து ஆளுநர் விஸ்வபூசன் ஹரிச்ந்திரன் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆந்திராவின் விஜயவாடாவில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் அமைந்துள்ளது. இங்கு ஆளுநர் விஸ்வபூசன் ஹரிச்சந்திரன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆளுநருக்கு பாதுகாப்புக்கு இருக்கும் தலைமை பாதுகாப்பு அதிகாரி, ஒரு செவிலியர், துப்புரவு பணியாளர் மற்றும் வீட்டு வேலை உதவியாளர் உள்பட 4 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் விஸ்வபூசன் ஹரிச்சந்திரன் விரைவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் விஜயவாடாவில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் கிருமி நாசினி ட்ரோன் மூலம் சனிக்கிழமை அன்று தெளிக்கப்பட்டது. இதற்கிடையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சஞ்சீவ் குமார். அவரது தந்தை, சகோதரர் மற்றும் அவர்களது நான்கு குடும்ப உறுப்பினர்கள் உள்பட மொத்தம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.