அமராவதி:

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும்  மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசம் இல்லை என்று புகார் கூறிய ஆந்திர மாநில அரசு மருத்துவமனை மருத்துவரை மாநில அரசு இடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆந்திராவிலும் ஏராளமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு மருத்துவர்  தங்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசம் போன்றவை இல்லை என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில்,   ஆந்திராவின் மூத்த எதிர்க்கட்சி அரசியல்வாதியான டாக்டர் சுதாகர் ராவ் பகிர்ந்ததுடன்,  மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள்  இல்லாதது மற்றும் போலீஸ் தவறான நடத்தை குறித்து புகார் கூறுவதைக் காணலாம், என்றும்,  மாநிலத்தின் எந்தவொரு அமைச்சர்களும் அல்லது சட்டமியற்றுபவர்களும் இந்த சூழ்நிலையைப் பற்றி அறியவில்லை என்றும் விமர்சித்திது இருந்தார்.

மேலும், இந்த விஷயத்தில், மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெக மோகன் ரெட்டி தலையிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் பிரச்சினையானதைத் தொடர்ந்து, ஜெகன்அரசு, அந்ரத மருத்துவரை இடைநீக்கம் செய்துள்ளது.

இது மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தெலுங்குதேசம் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,  “நர்சிபட்னம் அரசு மருத்துவமனையில் முகமூடிகள் மற்றும் கையுறைகள் இல்லாதது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்கு தெரிய வைத்தால், இதை செய்ய வேண்டியது  ஆந்திர அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொறுப்பாகும். மருத்துவர் கோரியது ஒரு N-95 முகமூடி. இது குற்றமா? இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக, மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது அதிர்ச்சியளிக்கிறது.

முன்னணி மருத்துவ வீரர்கள் இதுபோன்று அவமதிக்கப்பட்டால், “நோயாளிகளைப் பாதுகாப்பதற்கும் மீட்பதற்கும் தங்களை ஆபத்துக்குள்ளாக்குவதற்கு அரசாங்கம் அவர்களை எவ்வாறு ஊக்குவிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி,  சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட மருத்துவர், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டியிருப்பதுடன், வேண்டுமென்றே அரசுமீது  பொய்யான குற்றச்சாட்டுகளைஅரசியல் நோக்கத்துடன்  தெரிவித்துள்ளார்  என்று தெரிவித்து உள்ளது.