அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில்
அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடுகையாற்றில் வடகரையில் உள்ளது.
இறைவன், இறைவி
அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியதால் அம்மையப்பர் கல்யாணசுந்தரராகக் காட்சியளிக்கின்றார்.
அமைப்பு
தெற்கு நோக்கிய நிலையில் மூலவர் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் மூலவராக உள்ள லிங்கத் திருமேனியின் பின்புறம் கல்யாணசுந்தரர் காணப்படுகிறார். மாண்டவிய முனிவரின் சாபத்தினால் காட்னையாகத் திரிந்த சேரித்துவஜன் என்றழைக்கப்படும் பாண்டிய மன்னனும், புலிக்கால் முனிவரும் வழிபட்டதால் அத்தி-புலியூர் என்று பெயர் பெற்றது.