
‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அந்தகன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். ‘அந்தகன்’ படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார்.
ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு ‘அந்தகன்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
https://twitter.com/fredrickjj/status/1344956173196218369
Patrikai.com official YouTube Channel