அந்தமானில் தனித்தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு கொரோனா?

அந்தமான் தீவுக்கூட்டங்கள் சிலவற்றில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.

அங்குள்ள ஒரு குறிப்பிட்ட தீவில் ‘ஜாரவா’’ எனப்படும் பழங்குடியினர் உள்ளனர்.

பல்கி பெருகி இருந்த ‘ஜாரவா’ மக்களின் ஜனத்தொகை நாளாவட்டத்தில் படிப்படியாகக் குறைந்து இப்போது வெறும் 480 பேர் மட்டுமே உள்ளனர்.

அந்தமான் தீவில் வசிக்கும் இந்த மக்களை, வெளி ஆட்கள் சந்திக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

துண்டிக்கப்பட்ட தீவில் வாழும் இந்த மக்களுக்கு உதவ, ’’ அந்தமான் ஆதிம் சஞ்சாதி விகாஸ் சமிதி’’ என்ற தன்னாட்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பில் உள்ள 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தெற்கு அந்தமானில் ’ஜிர்காடங்க்’ என்ற இடத்தில் செயல்பட்டு வரும் அந்த அமைப்பின், அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

அந்த தீவில் வசிக்கும் ’ஜாரவா’ இன பழங்குடியின மக்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ? என அலுவலர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வெளி ஆட்களிடம் இருந்து, நோய்த் தொற்று பரவி விடக்கூடாது என்று ஒரே காரணத்துக்காவே அந்த பழங்குடியின மக்கள், தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

-பா.பாரதி.