டில்லி:

லைநகர் டில்லியில் மாணவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, நாட்டில் சமஸ்கிருதத்தை விட தொன்மை யான மொழி தமிழ்  என்று கூறினார்.

தமிழகத்தில் இந்தி திணிப்பு நடைபெற்று வரும் வேளையில், மோடியின் பேச்சு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களிடையே பரிட்சை பயத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி மாணவர்களிடையே கலந்துரை யாடினார். அப்போது தான் மாணவர்களுக்கு தான் நண்பராக இருப்பதாகவும் கூறினார்.

டெல்லியின் டாக்காடோரா ஸ்டேடியத்தில் ‘பரீக்‌ஷா பே சர்ச்சா’  என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மாநிலம் முழுவதும் இருந்து  பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் நாடு முழுவதும் இருந்து பலர், சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் மாணவர்களிடையே கேள்விகள் கேட்டும், பதில் அளித்தும் கலந்துரையாடினர்.

தொடர்ந்த பேசிய பிரதமர் நரேந்திர மாணவர்கள் தங்களின் தேர்வு குறித்த  மனஅழுத்தத்தை வென்று, தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியம்  என்று கூறினார்.

மேலும்,  ‘இன்று உங்கள் முன்னால் நான் ஒரு மாணவனாக நிற்கிறேன் என்ற மோடி, தன்னை நாட்டின் பிரதமராக நினைக்காமல் உங்கள் நண்பராக கருதி எனக்கு நீங்கள் மதிப்பெண் அளிக்கலாம்’ என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், கவனித்தல் என்பது கற்பதற்கு அரியதொரு கலை என்று மக்கள் நினைப்பதுண்டு. ஆனால், அது உண்மையல்ல என்ற மோடி,  மகிழ்ச்சியான மனது நல்ல குறிக்கோளின் ரகசியம்” என்று கூறினார்.

நாட்டின் தொன்மையான மொழி எது என்ற மாணவனின்  கேள்விக்கு பதில் அளித்த மோடி, சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் என்றும்,மாணவர்கள் தமிழ்  கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியிறுத்தினார்.