
திருவனந்தபுரம்: கேரள கடற்பகுதியில், மிகப்பழமையான ஒரு மீன் இனத்தைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
விலாங்கு மீனைப் போல் நீந்தும் அந்த மீன், தோற்றத்தில் டிராகனைப் போல் இருப்பதாகவும், அது பல நூறு ஆண்டுகளாக மறைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மீன், நீருள்ள நிலத்தடிப் பாறைகளில் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு, ‘லார்ட் ஆப் த ரிங்ஸ்’ என்ற ஹாலிவுட் இதிகாசப் படத்தில்(படத் தொடர்) வரும் ஒரு கதாப்பாத்திரமான ‘கால்லும்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தவகை மீன் ஒரு பழமையான மீன் குடும்பத்தைச் சேர்ந்தது. டிராகன் பாம்புத் தலைகளைக் கொண்ட இந்த மீன், இத்தனை நூறாண்டுகள் கடந்தும்கூட, தனது பண்டைய தன்மைகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதனோடு சேர்ந்து, ‘மஹாபலி’ என்ற மற்றொரு துணை இன மீன் வகையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகளை, கடந்த 10 ஆண்டுகளில், மீன்கள் உலகில் நிகழ்ந்த ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக குறிப்பிட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel