பாமக தலைவர் யார் என்பதில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் முடிவுக்கு வராத நிலையில், உரிமை மீட்பு நடைபயணம் செல்ல அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
கட்சியை அழிக்க தலைமை நிலைய செயலாளர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாக கூறியதோடு தனக்கும் ராமதாசுக்கும் தெரியாமல் கட்சி தொண்டர்களிடம் பணம் வசூலித்து அவப்பெயரை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டினார்.

மேலும், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதிலும் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த உரிமை மீட்பு நடைபயணத்தை அன்புமணி அறிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் பிறந்த நாளான ஜூலை 25ம் தேதி துவங்கவுள்ள இந்த நடைபயணம் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக வடமாவட்டங்களில் தொகுதி வாரியாக அவர் நடைபயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடைபயணத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அவர் சந்தித்து பேச இருப்பதாக தெரிய வந்துள்ளது.