சென்னை: பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (மார்ச் 30) முதல் தொடங்குகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  ஏற்கனவே முதல்கட்டமாக 3 பேர் கொண்ட வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி,  கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் கே.என்.சேகர், செஞ்சியில் கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து 2வது மற்றும் இறுதிக்கட்ட  15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில்  தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பாமக வேட்பாளர்கள்:

1. தருமபுரி – சௌமியா அன்புமணி

2. பெரம்பூர் – திலகபாமா

3. திருப்போரூர் – பாலு

4. சோளிங்கர் – சரவணன்

5. விக்கிரவாண்டி – சிவக்குமார்

6. மயிலாடுதுறை – சித்தமல்லி பழனிசாமி

7. சேலம் வடக்கு – சதாசிவம்

8. விருத்தாசலம் – தமிழரசி ஆதிமூலம்

9. உத்திரமேரூர்- மகேஷ்குமார்

10.ரிஷிவந்தியம்- செழியன்

11. காட்டுமன்னார்கோவில்- அன்பு. சோழன்

12. சேலம் மேற்கு- கார்த்தி

13.பென்னாகரம்- பாடி வெ.செல்வம்

14. போரூர்- சி.ஆர்.பாஸ்கரன்

15.ஜெயங்கொண்டம்- வைத்தி

[youtube-feed feed=1]