சென்னை: திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்த “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளில், நான்கரை ஆண்டுகள் ஆகியும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது என்று தெரிவித்து உள்ளதுடன், இந்திய அளவில், தமிழ்நாடு கல்வியில் 20-ஆம் இடம், சுகாதாரத்தில் 26-ஆம் இடம், வேளாண்மையில் 15-ஆம் இடம் இருப்பதாக கூறியதுடன் வீழ்ச்சிப் பாதையில் தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

விடியல் எங்கே ஆவண தொகுப்பில் உள்ள முக்கிய அம்சங்கள்
1. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மக்களுக்கு ஆசைகாட்டி அவர்களின் வாக்குகளை கைப்பற்றும் நோக்குடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஆனால், அந்த தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுக எத்தனை வாக்குறதிகளை அளித்தது? அவற்றில் நிறைவேற்றப்பட்டவை எவ்வளவு? நிறைவேற்றப்படாதவை எவ்வளவு? அரைகுறையாக நிறைவேற்றப்பட்டவை எவ்வளவு? என்பதை பட்டியலிடும் ஆவணம் தான் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரித்து வெளியிடப்படும் “விடியல் எங்கே?” என்ற தலைப்பிலான ஆவணம் ஆகும்.
திமுக தேர்தல் வாக்குறுதிகள்
2. திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளின் விவரம் வருமாறு:
A. திமுக அளித்த வாக்குறுதிகளின் எண்ணிக்கை – 505
B. முழுமையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் – 66
C. அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் – 66
D. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் – 373
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
மீதமுள்ள 439 வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
3. 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக அளித்த வாக்குறுதிகளில் 12.94% மட்டும்தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 87.06% வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4. திமுகவின் தேர்தல் அளிக்கையில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகள் தவிர, கூடுதலாக 5 தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் பரப்புரையின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

மாநில சுயாட்சி, தமிழ் வளர்ச்சி
5. மாநில சுயாட்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை சார்ந்து மொத்தம் 12 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 3 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஒரே ஒரு வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
6. ஈழத் தமிழர் நலன் தொடர்பாக திமுக சார்பில் 4 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
நிர்வாக சீர்திருத்தம்; சேவை உரிமைச் சட்டம் இல்லை
7. நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக மொத்தம் 9 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒரே ஒரு வாக்குறுதி மட்டுமே அரைகுறையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* லோக் அயுக்தா அமைப்பு வலுப்படுத்தப்பட்டு அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான குற்றங்கள் விரைந்து விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். (வாக்குறுதி எண். 18)
* சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண்.19)
* ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண். 21)
* அரசு நிர்வாகத்தில் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அமைச்சர்களின் தேவையற்ற செலவு, பயணங்கள் தவிர்க்கப்படும். (வாக்குறுதி எண். 24)
உழவர்கள் நலன்
* ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்வதற்கான சந்தைகள் உருவாக்கப்படும். (வாக்குறுதி எண் – 30)
* கேரளாவில் செயல்படுத்தப்படுவதைப்போல் தமிழ்நாட்டில் அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும். (வாக்குறுதி எண்-32)
* விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் – 43)
* ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். இவை உலர் களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும். (வாக்குறுதி எண்-50)
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 360 ஏக்கரில் தோட்டக்கலைப் பல்கலைக் கழகம் தொடங்கப்படும். (வாக்குறுதி எண் – 53)
* தென் தமிழ்நாட்டில் மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 54)
* நியாயவிலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் – 68)
* தமிழ்நாட்டில் அனைத்து வகை விதை நெல்களுக்கும், மொத்தம் 1.05 லட்சம் டன் அளவுக்கு கிலோவுக்கு ரூ.10 வீதம் உழவர்களுக்கு மானியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 78
நீர்ப்பாசனத் திட்டங்கள் இல்லை
9. நீர் மேலாண்மைத் துறை தொடர்பாக 29 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 23 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 4 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 2 வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான நீர் மேலாண்மைத் திட்டம் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 89)
* சென்னை மாநகரின் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் ஏரிகளின் பாதுகாப்பிற்காக ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 93)
* நொய்யல் ஆறு சீர்படுத்தப்பட்டு, பவானி – நொய்யலாறு – அமராவதியாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 103)
* சேலம்-மேச்சேரி நீரேற்றுத் திட்டம் நிறைவேற்றப்படும். (வாக்குறுதி எண் – 106)
* கொளத்தூர் தோணிமடுவுத் திட்டம் – நான்கு மலைகளிலிருந்து வரக்கூடிய நீரைத் தடுப்பணை கட்டித் தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் – 107)
* கிருஷ்ணகிரி மாவட்டம் படேதலாவ் ஏரியில் இருந்து வெண்ணம்பள்ளி, அச்சமங்கலம் உள்ளிட்ட 5 கால்வாய்களையும் நக்கல்பட்டி, புதூர் ஆகிய 10 ஏரிகளையும் இணைக்கும் வகையில் புதிய கால்வாய்கள் வெட்டப்படும். (வாக்குறுதி எண் – 110)
மீனவர்கள் நலன்
10. மீனவர்களின் நலன்கள், மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக 25 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதிகூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 5 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 20 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* மீனவர்கள் நலனைக் காக்க கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் – 113)
* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அதற்கான சலுகைகளைப் பெற்றுத்தர திமுக அரசு நடவடிக்கை எடுக்கும். (வாக்குறுதி எண் – 114)
* மீனவர்களுக்கு 2 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்; (வாக்குறுதி எண் – 116)
* மீன்வளத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மீன்வளக் கல்லூரிகள், கடல்சார் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும். (வாக்குறுதி எண் – 121)
* அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீன் உலர்த்தும் தளம் அமைத்துத் தரப்படும். (வாக்குறுதி எண் – 130)
நெசவாளர்கள் நலன்
11. நெசவாளர்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குறுதிகள் 14, நிறைவேற்றப்பட்டவை 3, நிறைவேற்றப்படாதவை 9, அரைகுறையாக நிறைவேற்றப்பட்டவை 2.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* நெசவாளர்களுக்கென்று தனியாகக் கூடுறவு வங்கி அமைக்கப்படும். (வாக்குறுதி எண்-138)
* ஜவுளித்துறையை மேம்படுத்துவதற்குத் தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 142)
* நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடனுக்கான வட்டி 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்படும். (வாக்குறுதி எண் – 148)
தொழிலாளர்கள் நலன்
12. பாட்டாளி வர்க்கமான தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், மொத்தம் 8 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் 6 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, தலா ஒரு வாக்குறுதி அரைகுறையாகவும், முழுமையாகவும் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 152)
* மாநகரங்கள் மற்றும் நகரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்த ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 155)

மாணவர்கள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு
13. மாணவர்களின் நலன் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பாக 33 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் நீட் ரத்து உள்ளிட்ட 21 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தலா 6 வாக்குறுதிகள் அரைகுறையாகவும், முழுமையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். (வாக்குறுதி எண் – 159)
* நீட் தேர்வு ரத்து செய்யப்படும். (வாக்குறுதி எண் – 160)
* மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். (வாக்குறுதி எண் – 161)
* மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். (வாக்குறுதி எண் – 164)
* முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை. (வாக்குறுதி எண்-179)
* பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 181)
* அரசுத் துறை காலியிடங்கள் நிரப்பப்பட்டு, 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை. (வாக்குறுதி எண் – 187)
* அரசுத் துறைகளில் 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். (வாக்குறுதி எண் – 188, 189, 190, 191)
தொழில் வளர்ச்சி
14. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக 28 வாக்குறுதிகளை திமுக அதன் தேர்தல் அறிக்கையில் அளித்திருந்தது. ஆனால், அவற்றில் 23 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 3 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இரு வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றப்படும். (வாக்குறுதி எண் – 196)
* வேலையில்லா பட்டதாரிகள் புதிய தொழில் தொடங்க ஆண்டுக்கு 25 ஆயிரம் பேருக்கு தலா ரூ.20 இலட்சம் குறைந்த வட்டி கடன் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 206)
* திண்டுக்கல், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் தோல் பொருள் பூங்கா அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 211)
* 10 இலட்சம் மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும். (வாக்குறுதி எண் – 213)
* 12ஆம் வகுப்பு மற்றும் தொழிற்கல்வி படித்த இளைஞர்கள் 15 பேர் இணைந்து இளைஞர் சுயமுன்னேற்ற குழுக்களை அமைத்து தொழில் தொடங்க முன்வந்தால் அவர்களுக்கு 25% மானியம், 65% வங்கிக் கடனாக வழங்கப்படும். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசு கொள்முதல் செய்யும் போது, ஒப்பந்தப் புள்ளியில் 10% சலுகை வழங்கப்படும். இதனால் ஒரு இலட்சம் பேர் பயனடைவர். (வாக்குறுதி எண் – 217)
மின்கட்டணம் குறைக்கப்படவில்லை
15. மின்துறை சார்ந்து மொத்தம் 14 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதி மட்டும்தான் நிறைவேற்றப்பட்டது. 2 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டன. 11 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* போர்க்கால அடிப்படையில் மின்உற்பத்தியைப் பெருக்கி, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் – 220)
* மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறை கொண்டுவரப்படும். இதனால், நுகர்வோருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை மிச்சமாகும். (வாக்குறுதி எண் – 221)
மானிய விலை உளுந்து இல்லை
16. பொதுவிநியோகத் திட்டம் தொடர்பாக மொத்தம் 7 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்
* குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 234)
* மின் சேமிப்பை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் 3 எல்.இ.டி. பல்புகள் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 239)
* நியாய விலைக் கடைகளில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதந்தோறும் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட உளுந்து மீண்டும் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 240)
17. சுற்றுலா மேம்பாடு தொடர்பாக அளிக்கப்பட்ட இரு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
பெண்கள் பாதுகாப்பு
18. பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக 22 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் 14 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தலா 4 வாக்குறுதிகள் அரைகுறையாகவும், முழுமையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* 35 வயதுக்கு மேற்பட்ட கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 250)
* கருவுற்ற பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் 8 மாதத்திற்கு மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 252)
* 5 வகையான திருமண நிதி உதவித் திட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படுவதுடன், 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 255, 256, 257, 258, 259)
* வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் கிராமப்புற பெண்களுக்கு கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல், மண் பானை செய்தல் போன்ற விவசாயம் சார்ந்த சிறுதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 261)
சமூக நீதி
19. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்துவதற்காக 21 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில், முக்கியத்துவம் இல்லாத 3 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ள 18 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்
* மத்திய அரசின் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும். (வாக்குறுதி எண். 265)
* மாநிலங்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவை மாநில அரசுகளே நிர்ணயித்துக்கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த மத்திய அரசை திமுக அரசு வலியுறுத்தும். (வாக்குறுதி எண் – 267)
* தனியார் துறையில் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை திமுக அரசு வலியுறுத்தும். (வாக்குறுதி எண் – 269)
* உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை திமுக அரசு வலியுறுத்தும். (வாக்குறுதி எண் – 270)
* தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களை திமுக அரசு நிறைவேற்றும். (வாக்குறுதி எண் – 275)
சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், வணிகர்கள் நலன்
20. சிறுபான்மையினர் நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக மொத்தம் 12 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் 4 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
பத்திரிகையாளர் நலன்
24. பத்திரிகையாளர் நலனுக்காக திமுக சார்பில் அளிக்கப்பட்டிருந்த 6 வாக்குறுதிகளில், உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள் குடும்ப நல நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும், பத்திரிகையாளர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் திரும்பப்பெறப்படும் ஆகிய இரு வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
25. பத்திரிகையாளர்களுக்கு ஊதியக் குழு பரிந்துரைகள் நிறைவேற்றப்படும், குடியிருப்பு மனைகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 4 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

மருத்துவத்துறை
26. மருத்துவ சேவை, மருத்துவக் கல்வி ஆகியவை சார்ந்து 18 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் 15 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 3 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* கோவை, நெல்லை, திருச்சி மற்றும் கிருஷ்ணகிரியில் மாநில அரசின் நிதியிலிருந்து புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் 3 ஆண்டுகளில் கட்டப்படும். (வாக்குறுதி எண் – 348)
* 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை முதல் கட்டமாக 2 ஆயிரமாக உயர்த்தப்படும். (வாக்குறுதி எண் – 349)
* மாவட்ட நெடுஞ்சாலைகளில் 50 கிமீ தொலைவிற்கு ஒன்று வீதம் அவசர சிகிச்சை மருத்துவமனை அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 350)
* விரிவுபடுத்தப்பட்ட சென்னைப் பெருநகரில் தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் ஆகிய 3 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் கட்டப்படும். (வாக்குறுதி எண் – 354)
வெள்ளத்தடுப்புப் பணிகள், விளையாட்டு மேம்பாடு
27. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தடுப்புப் பணிகள், விளையாட்டு, சுறறுச்சூழல், வனம் ஆகிய துறைகள் சார்ந்து 13 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில், 11 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, 2 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், காவல்துறை
28. சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட துறைகள் சார்ந்து 20 வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதி மட்டும்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. 13 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, 6 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* தமிழ்நாட்டில் சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வருவதற்கு வசதியாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம். (வாக்குறுதி எண் – 374)
* தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்புச் செய்யப்படும். (வாக்குறுதி எண் – 375)
* ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்படும். (வாக்குறுதி எண் – 376)
* நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 380)
* சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் புதிய புறநகர்கள் உருவாக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். (வாக்குறுதி எண்-393)
29. குடிநீர்த் திட்டங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட 4 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
30. வீட்டுவசதி, பால்வளத்துறை சார்பில் 7 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இரு வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை
31. இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அளிக்கப்பட்ட 17 வாக்குறுதிகளில் 11 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 4 வாக்குறுதிகள் அரைகுறையாகவும், 2 வாக்குறுதிகள் முழுமையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* கிராமக் கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 ஊதியம் வழங்கப்படும். ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும். (வாக்குறுதி எண் – 406)
* கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும். (வாக்குறுதி எண் – 413)
* அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் பயிற்சி பெற்ற 205 பேருக்கு அர்ச்சகர் பணி வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 417)

பேருந்துக் கட்டணம் குறைப்பு இல்லை
32. நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து, தொடர் வண்டித் திட்டங்கள், விமான நிலையங்கள் போன்றவை சார்ந்து 27 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 24 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, இரு வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. ஒரு வாக்குறுதி அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* அரசுப் போக்குவரத்துக் கழகங்களை இலாபத்தில் இயக்க 2018ஆம் ஆண்டில் அரசுக்கு திமுக அளித்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துப் பயணக் கட்டணங்கள் குறைக்கப்படும். (வாக்குறுதி எண் – 427)
* சென்னை – கன்னியாகுமரி இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் – 433)
* திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் வரை பறக்கும் இரயில் பாதை அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 437)
* எண்ணூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும், தீவுத்திடலில் இருந்து மாமல்லபுரம் வரையிலும் பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்பட்டு, படகுப் போக்குவரத்து தொடங்கப்படும். (வாக்குறுதி எண் – 438)
* தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 15 புதிய ரயில்பாதைத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும். (வாக்குறுதி எண் – 442)
* சென்னை மெட்ரோ ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 446)
* வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் – 448)
பிற துறைகள்
33. பிற துறைகள் சார்ந்து மொத்தம் 57 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் 37 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 9 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டன. 11 வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* தமிழ்நாட்டில் 100% வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் பி.சுப்பராயனுக்கு நாமக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 456)
* கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களைப் பாதுகாக்க அந்தந்த பகுதியில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 458)
* முக்கியமான கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் கொண்டு வந்து விலை குறைக்கப்படும். (வாக்குறுதி எண் – 468)
* பல்கலைக் கழகங்கள் இல்லாத முக்கிய மாவட்ட தலைநகரங்களான காஞ்சிபுரம், ஈரோடு போன்ற முக்கிய இடங்களில் புதிய பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 496)
* சமையல் எரிவாயு உருளைகளுக்கு, ஒரு மாதத்திற்கு ஓர் உருளை என்ற அளவில், ரூ.100 வீதம் மானியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 503)
எந்த முன்னேற்றமும் இல்லாத ஸ்டாலினின் 7 வாக்குறுதிகள்
34. இவைதவிர, 10 ஆண்டு தொலைநோக்குத் திட்டத்திற்கான 7 உறுதிமொழிகளை திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவை அனைத்தும் 10 ஆண்டு திட்டங்கள் என்பதால், அவை நிறைவேற்றப் பட்டிருக்கின்றனவா? என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூறமுடியாது.
அதே நேரத்தில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று முழுமையாக 50 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற மேலாண்மை, ஊரகக் கட்டமைப்பு, சமூகநீதி சார்ந்த 7 உறுதிமொழிகளில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லநிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:
* அரசுப் போக்குவரத்துக் கழகங்களை இலாபத்தில் இயக்க 2018ஆம் ஆண்டில் அரசுக்கு திமுக அளித்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துப் பயணக் கட்டணங்கள் குறைக்கப்படும். (வாக்குறுதி எண் – 427)
* சென்னை – கன்னியாகுமரி இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் – 433)
* திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் வரை பறக்கும் இரயில் பாதை அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 437)
* எண்ணூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும், தீவுத்திடலில் இருந்து மாமல்லபுரம் வரையிலும் பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்பட்டு, படகுப் போக்குவரத்து தொடங்கப்படும். (வாக்குறுதி எண் – 438)
* தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 15 புதிய ரயில்பாதைத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும். (வாக்குறுதி எண் – 442)
* சென்னை மெட்ரோ ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 446)
* வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் – 448)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
