ர்மபுரி

ன்னியர்களின் கோட்டை என கூறப்படும் தர்மபுரி தொகுதியில் வன்னியர் கட்சியான பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வி அடைந்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக அணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்தன. காங்கிரஸ் – திமுக கூட்டனியில் இடது சாரிகள்,விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. இதில் அதிமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்த பாமக அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தர்மபுரி தொகுதியில் ஏற்கனவே மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் பாமக சார்பில் போட்டியிட்டார்.

தர்மபுரி தொகுதியில் வன்னிய சாதியினர் அதிகம் உள்ளனர். ஆகவே வன்னியர் கட்சி என கூறப்படும் பாமக வின் அன்புமணி ராமதாஸ் தாம் நிச்சயம் வெற்றி பெருவோம் என நம்பி இருந்தார். அவரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில்குமார் களமிறங்கினார். செந்தில்குமாரின் தாத்தாவான வடிவேலு கவுண்டர் தர்மபுரி மாவட்டத்தை சேலம் மாவட்டத்தில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக்க போராடியவர் ஆவார்.

நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் அன்புமனி ராமதாஸ் 5,04,988 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளரான செந்தில்குமார் 5,74,998 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். சுமார் 70,753 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அன்புமணி ராமதாஸ் க்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தர்மபுரி தொகுதியில் கடந்த 1977 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்கனவே மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.