ஜுங்கா படத்தைத் தொடர்ந்து அருண் பாண்டியன் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குனர் கோகுல் .
அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு அன்பிற்கினியாள் எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படம் மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, இசையமைப்பாளராக ஜாவித் ரியாஸ், எடிட்ட்ராக பிரதீப் ஈ.ராகவ், கலை இயக்குநரக ஜெய்சங்கர் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் அன்பிற்கினியாள் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த டீசரில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தந்தை-மகளாக நடித்துள்ளனர்.
இருவரின் ஆரம்பக் கட்ட அன்பு காட்சிகளும் அதன் பின்னர் வரும் த்ரில் காட்சிகளும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. பிரவீன், ரவீந்திரா, பூபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .