விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் படத்தின் டீஸர் சென்ற மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த டீசரில் ஒருவரை சுத்தியலால் பல முறை அடித்து கொலை செய்கிறார். பின் கண்ணாடி முன் நின்று ரத்தத்தை தன் உடம்பில் தேய்த்து கொள்கிறார் . அதன் பின் சட்டையை வாஷிங் மெஷினில் துவைக்கிறார். இது உண்மை கதையாக இருக்கலாம் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் மோகன்தாஸ் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டமும் இருக்கிறது என கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.

முதல் பாகத்தின் ஷூட்டிங்கே இன்னும் துவங்கவில்லை. டீசருக்காக தனது அலுவலகத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டும் ஷூட் செய்ததாக விஷ்ணு முன்பே கூறி இருந்தார்.

விஷ்ணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தான் மோகன்தாஸ் படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இடம் பொருள் ஏவல் படத்திற்கு பிறகு இந்த ஜோடி இணைந்துள்ளது கூடுதல் தகவல்.

இந்நிலையில் படத்தின் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் பற்றிய அறிவிப்பு தற்போது தெரியவந்துள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இணைந்துள்ளனர். கே.ஜி.எஃப் படத்தில் இவர்களது ஸ்டண்ட் பணி பெரிதளவில் பேசப்பட்டது.

 

[youtube-feed feed=1]