நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குனர் சேரன் இணைந்து நடித்து விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி ரங்கநாதன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார் இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் ஷிவாத்மிகா, மௌனிகா, சரவணன், சினேகன், ஜாக்குலின், மைனா, சுஜிதா, சிங்கம் புலி, டேனியல் பாலாஜி, நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இயக்குனர் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய தகவல் வெளியானது. ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் ஆடியோ உரிமைகளை பிரபல இசை நிறுவனமான வசி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.