பாகிஸ்தானில் இந்தியர் கைது!! பயண ஆவணம் இல்லை என குற்றச்சாட்டு

Must read

டெல்லி:

சரியான பயண ஆவணம் இல்லாத காரணத்தால் இந்தியர் ஒருவர் இஸ்லாமாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் ஃஎப்&8 பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் முழுமையான பயண ஆவணங்கள் இல்லை என் சாமா டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் மீது வெளிநாட்டு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளளார். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் இந்திய கப்பற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை சர்வதேச நீதிமன்ற தடை விதித்ததை தொடர்ந்து, தற்போது இந்த கைது விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது.

ஜாதவ் தேச விரோத செயல்களில் ஈடுபட்டபோது பாலேசிஸ்தானில் வைத்து கைது செய்ததாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால் ஈரானில் வைத்து ஜாதவை கைது பாகிஸ்தான் கைது செய்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.

More articles

Latest article