பெங்களூரு
ஐஐடியில் பொறியாளர் பட்டம் பெற்று தற்போது ஒலா நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவரை ஆதார் விவரங்களை திருடியதற்காக போலீஸ் கைது செய்துள்ளனர்.
அபினவ் ஸ்ரீவத்சவ் (வயது 31) கான்பூர் ஐஐடியில் பொறியாளர் பட்டம் பெற்றவர். தற்போது ஓலா நிறுவனத்தில் மென்பொருள் நிறுவனராக பணி புரிகிறார். இவர் மென்பொருட்கள் தயாரித்து அதை விற்றும் வந்தார். அந்த மென்பொருளில் வரும் விளம்பரங்கள் மூலம் ரூ 40000 வரை அவருக்கு கிடைத்து வந்தது.
அவர் சமீபத்தில் ஆதார் நிறுவனத்தின் அனுமதியின்றி மொபைல் ஆப் ஒன்றை நிறுவினார். அந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டார் மூலம் கடந்த ஆறு மாதங்களில் லட்சக்கணக்கான மக்கள் நிறுவி உள்ளனர். அந்த ஆப் மூலம் அதை டவுன் லோட் செய்தவர்கள் ஆதார் விவரங்கள் அனைத்தையும் அந்த நிறுவனத்துக்கு தெரியாமல் எடுக்க முடியும். இந்த ஆப் மூலம், பெயர், விலாசம், பாலினம், ஈ மெயில் முகவர், தொலைபேசி நம்பர் ஆகிய அனைத்தும் கண்டறிய முடியும். இதன் மூலம் ஸ்ரீவத்சவ் தானும் பல ஆதார் விவரங்களை திருடியுள்ளார்.
இது குறித்து ஆதார் நிறுவனம் (UIDAI) போலீசில் புகார் அளித்தது. கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 26 வரை ஆதார் விவரங்கள் திருடப்பட்டதாக அபினவ் ஸ்ரீவத்சவ் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் விசாரணைக்காக 10 நாட்கள் போலீசார் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளார். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம். போலீஸ் விசாரணையில் அவர் இந்த ஆதார் விவரங்கள் திருடியதற்கான காரணத்தையும் அவரால் எப்படி ஆதார் நிறுவனத்தின் வெப் சைட்டை தனது கைப்பிடிக்குள் கொணர முடிந்தது என்பது பற்றியும் விசாரிக்கப் போவதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அபினவ் ஸ்ரீவத்சவ் ஆன்லைன் மென்பொருள் துறையில் மிகுந்த வல்லவராக தெரிகிறார். அவர் நிறுவிய மென்பொருட்கள் அனைத்தும் மிகுந்த தொழில்நுட்ப மதிப்புடையவை. அனைத்தும் உபயோகிப்போர் சுலபமாக உபயோகிக்கும் வகையில் அமைந்துள்ளது. அது தவிர ஏற்கனவே தான் பல ஆன்லைன் வெப்சைட்டுகளில் உள்ள விவரங்களை அவர்களுக்கு தெரியாமல் கண்டறிந்தவர் என முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீவத்சவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.