சென்னை: ஒரு சிறந்த அரசாங்கம் விற்பனைக் களத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று எல்ஐசி விற்பனை குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிப்ரவரி 1ந்தேதி மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செயல் பட்ஜெட்டில், ஏர் இந்தியாவை விற்பனை செய்துவிட்டோம், அடுத்து எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தார். முன்னதாக fடந்த 2021ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருந்தது.  இது பலத்த எதிர்ப்புகளை எழுப்பியது. அரசின் பொதுச்சொத்துக்களை தனியார்களிடம் தாரை வார்ப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இருந்தாலும் அதை கண்டுகொள்ளா மத்தியஅரசு, அதை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

இந்த நிலையில், மத்தியஅரசின் முடிவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, எல்ஐசி விற்பனை முடிவை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,

பல ஆண்டுகளாக எல்ஐசி, கோடிக்கணக்கான இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அதன் திறமையான செயல்பாட்டின் மூலம் சமூகப் பாதுகாப்பை அளித்து வருகிறது.

மத்திய அரசின் டிஆர்ஹெச்பியை செபியிடம் தாக்கல் செய்து அதன் 5% பங்குகளை விற்பது சந்தேகத்திற்கு இடமின்றி தனியார்மயத்தை நோக்கி நகர்வது மற்றும் மிகவும் விரும்பத்தகாதது.

இது எமது மக்களின் நலனுக்காகவோ அல்லது அமைப்பின் நலனுக்காகவோ இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 

ஒரு சிறந்த அரசாங்கம் விற்பனைக் களத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக நிறுவனங்களை உருவாக்க வேண்டும். இந்த தவறான சிந்தனை முடிவை திரும்பப் பெற்று எல்ஐசி இந்தியாவை என்றென்றும் காப்பாற்றுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்

என தெரிவித்துள்ளார்.