இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு!

Must read


ந்தோனேஷியாவின் அபேபுரா நகரில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது.

இதை அமெரிக்க புவிவியல் ஆய்வு மையமும் உறுதிப்படுத்தி உள்ளது.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதாகவும், இதன் காரணமாக மக்கள் வீதியில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சேத விவரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

தமிழகத்தில் தென்மாவட்ட கடற்பகுதியில் கடந்த 2 நாட்களாக ராட்ச அலைகள் எழுந்து பயமுறுத்தி  வரும் நிலையில், தற்போது இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article