பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் ஹம்பி பகுதியில் 18வயது இளைஞர் உள்பட 2 பேர் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய கர்நாடக மாநில அமைச்சரின் மகன், எடியூரப்பா  அரசால் பாதுகாக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பவத்தன்று கர்நாடக மாநில அமைச்சர் ஆர்.அசோகாவின் மகன் ஹம்பி பகுதியில் குடிபோதையில் அதிகவேகமா  காரை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, சாலையை கிராஸ் செய்த 18வயது இளைஞர் உள்பட 2 பேர் மீது கார் வேகமாக மோடி, சாலையோரத்தில் தூக்கி வீசியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பாதசாரிகள் 2 பேரும் மரணம் அடைந்த நிலையில், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர், முதல் தகவல் அறிக்கையில், அமைச்சரின் மகனின் பெயரை சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் நடத்துவோம் என்று மாநில பாஜக அரசுக்க அந்த பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் தீயாக பரவி வருகிறது. இதுபோன்ற செயல்கள் மக்களிடையே பயத்தை ஏற்படுத்துவதாகவும், இது பாஜகவின் விதி மீறல் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.