
‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான எமி ஜாக்சனின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது..
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள எமி ஜாக்சன் ‘போகி மேன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். மேலும், ‘சூப்பர் கேர்ள்’ என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.
எமியின் காதலர் ஜார்ஜ், லண்டனில் தொழிலதிபராக இருக்கிறார். சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன். இந்நிலையில், நேற்று தனக்கும், தன்னுடைய காதலருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.
Patrikai.com official YouTube Channel