
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இதன் டீசர் சில வாரங்களுக்கு முன்பு தான் வெளியாகி இருந்தது.
வழக்கமாக ஜூன் மாதம் துவங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வருடம் மட்டும் கொரோனா காரணமாக மிகவும் தாமதமாக தொடங்குகிறது.
அக்டோபர் மாதம் துவங்க உள்ள பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்கிற ஆவல் அதிகரித்துள்ளது .
இந்நிலையில் தற்போது கலக்கப் போவது யாரு, அது இது எது புகழ் காமெடி நடிகர் அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. இருப்பினும் அது பற்றிய உறுதியான அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.
Patrikai.com official YouTube Channel