
மதுரை:
டிடிவியின் புதிய கட்சியின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மேலூரில் நடைபெற்று வரும் அவரது அணியினர் கலந்துகொண்டுள்ள புதிய கட்சி தொடக்க விழாவில், புதிய கட்சியின் பெயரை டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.
கட்சியின் பெயராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அறிவித்துள்ளார்.
மேலூர் அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் இடத்தில் 60-க்கு 40 வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்ட மேடையில் டிடிவி தினகரன் உள்பட அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர்.
இன்று காலை 9.30 மணி அளவில் மேடைக்கு வந்த டிடிவி தினகரன் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
அதைத்தொடர்ந்து மேடையில் தொண்டர்களிடையே தனது கட்சியின் பெயரை சரியாக 10.30 மணிக்கு டிடிவி தினகரன் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து கட்சியின் கொடியையையும் அறிமுகப்படுத்தினார். அந்த கொடி கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்திலும், அதனுள் ஜெயலலிதாவின் உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]