காந்திநகர்:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பதவி ஏற்க உள்ள நிலையில், புதிய அமைச்சரவை யில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கும் பங்குபெறுவார் என்று குஜராத் மாநில பாஜக தலைவர் ஜித்து விகானிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக அமித்ஷா அமைச்சரவையில் பங்குபெறுவது உறுதியாகி உள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக பெரும்பாரியான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்ற நிலையில், இன்று இரவு மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது.
அமைச்சரவையில் பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் என அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதும், பாஜக தேசிய தலைவரான அமித்ஷாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என செய்திகள் பரவின.

இந்த நிலையில், குஜராத் மாநில பாஜக தலைவர் ஜித்து வகானி, மோடி அமைச்சரவையில் பங்கு பெறும் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள் என்று டிவிட் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக அமித்ஷா அமைச்சராவது உறுதியாகி உள்ளது.
[youtube-feed feed=1]