டெல்லி
மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் என் டி ஏ கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ஊழ்ல முடிவுக்கு வரும் எனக் கூறியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 25) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளார். தமிழக அமைச்சர்கள் மேலான ஊழல் குற்றச்சாட்டுகள், டாஸ்மாக் ஊழல் தொடர்பான விசயங்களையும் எடுத்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில்,,
“2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்து விடும்”
என்று பதிவிட்டுள்ளார்.