டில்லி

ந்தி திரையுலகின் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் தன் தந்தை எழுதிய பாடலை அனுமதியின்றி உபயோகித்ததற்காக ஆம் ஆத்மி பிரமுகர் குமார் பிஸ்வாஸுக்கு வக்கீல் நோட்டிச் அனுப்பியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான குமார் பிஸ்வாஸ் ஒரு கவிஞரும் ஆவார்.  இவர் ஜூலை 8ஆம் தேதியன்று, நீட் கா நிர்மாண் என்னும் பெயரில் ஒரு வீடியோ பாடலை யு டியூபில் வெளியிட்டார்.  அதை எழுதியவர் மறைந்த ஹரிவன்ஷ்ராய் பச்சன்.  இவர் இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் தந்தை.

இதைக் கண்ட அமிதாப் தன் அனுமதியின்றி தன் தந்தையின் பாடலை உபயோகித்தமைக்கு இது காப்பிரைட் சட்டத்துக்கு எதிரானது என்றும், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  தற்போது இதற்காக நஷ்ட ஈடு கேட்டு வக்கில் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.  அதில், உடனடியாக இந்தப் பாடலை யூ டியூபில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த பாடல் பதிவின் மூலம் குமார் பிஸ்வாஸுக்கு கிடைத்த பணம் எல்லாவற்றையும் அமிதாப் பச்சனிடம் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.

குமார் பிஸ்வாஸ் இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.  அதில் “தங்கள் தந்தையின் பாடலுக்கு மற்றவர்களிடம் இருந்து எனக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளது.  ஆனால் உங்களிடம் இருந்து எனக்கு வக்கீல் நோட்டிஸ் கிடைத்துள்ளது.  நான் அந்தப் பாடலை தங்கள் தந்தைக்கு அஞ்சலி செலுத்தவே பதிந்தேன்.  அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்  நான் அந்தப் பாடலை நீக்கி விடுகிறேன்.  அதன் மூலம் எனக்கு கிடைத்த ரூ. 32 ஐயும் தங்களுக்கு அளிக்கிறேன்.  வணக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீட் கா நிர்மாண் என்னும் இந்தப் பாடல் ஹரிவன்ஷ்ராய் பச்சனின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று.