இந்தி ‘சூப்பர்ஸ்டார்’ அமிதாப்பச்சனின் மகள் வழி பேத்தி, நவ்யா நவேலி நந்தா. அமிதாப் மகள் ஸ்வேதா பச்சன் – நிகில் நந்தாவின் மகள்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்ற நவ்யா, ‘ஆரா’ என்ற சுகாதார அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.
‘இன்ஸ்டாகிராம்’ கணக்கை ஆரம்பித்துள்ள நவ்யா, அதனை பொதுமக்கள் பார்வைக்கு தற்போது திறந்து விட்டுள்ளார். இந்த ‘இன்ஸ்டாகிராம்’ கணக்கில் திகட்ட திகட்ட 104 புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
குழந்தை பருவம், பள்ளி பருவம் மற்றும் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட போட்டோக்கள் என வித விதமான புகைப்படங்கள் வசீகரிக்கும் தலைப்புகளுடன் இதில் காணக்கிடக்கின்றன.
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது எடுத்த படத்தில் தாத்தா அமிதாப், பாட்டி ஜெயா பச்சன், மாமா அபிஷேக், அத்தை ஐஸ்வர்யா ராய் என ஒட்டுமொத்த குடும்பமும் காட்சி தருகிறது.
தாத்தா அமிதாப்பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ‘ஜுனியர் & சீனியர்’ என்ற தலைப்பில் நவ்யா வெளியிட்டுள்ளார்.
தனது சகோதரன் அகஸ்தியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துக்கு “டேய்! உனக்கு எனது சிறுநீரகத்தையே தானமாக தரலாம் என நினைக்கிறேன். ஆனால் எனது ‘சார்ஜரை’ தர மறுக்கிறாயே!” என குறும்பாக ‘கமெண்ட்’ அடித்துள்ளார், அமிதாப் பேத்தி.
– பா. பாரதி