இந்திய சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், சில சினிமாக்களில் பின்னணி பாடகராக குரல் கொடுத்துள்ளார்.
1979 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மிஸ்டர் நட்வாரிலால்’ என்ற படத்தில் முதன் முறையாக ‘மியார் பாஸ் ஆரோ’ எனும் பாடலை பாடி இருந்தார்.
இந்த நிலையில் அமிதாப்பச்சன் பேத்தியான ஆரத்யா, தாத்தா அமிதாப்பச்சனுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடி இருக்கிறார். மும்பையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் இந்த பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 வயது ஆரத்யாவுடன், தான் சேர்ந்து மைக் முன்பு நின்று பாடுவதை அமிதாப்பச்சன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த பாடல் ஏதாவது சினிமா படத்துக்கான பாடலா? அல்லது ஆல்பத்துக்காவா? என்பது தெரியவில்லை.
அமிதாப்பச்சன் இப்போது பிரமாஸ்திரா, ஜிந்த், ஷேக்ரா மே டே ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆரத்யா, இந்த பாடலை சினிமாவுக்கு பாடி இருந்தால், அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வரும் மூன்றாவது தலைமுறையாக அவர் இருப்பார்.
ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனின் மூத்த மகள் தான், ஆரத்யா
– பா. பாரதி