டில்லி

மித் ஷா திடீரென தனது கேரளா கர்னாடகா பயணத்தை முடித்துக் கொண்டு டில்லி சென்று விட்டார்.

பா ஜ க தலைவர் அமித் ஷா கேரளா மற்றும் கர்னாடகாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  கேரளாவில் அவர் கண்ணனூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.  அங்கு அவர் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வன்முறையைக் கண்டித்து பாத யாத்திரை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார்.  இதையொட்டி வரும் ஐந்து மற்றும் ஆறாம் தேதியில் ஜனரக்‌ஷா யாத்திரையில் கலந்துக் கொள்ளப் போவதாக சொல்லி இருந்தார்.

அத்துடன் அமித் ஷா மங்களூரில் சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதாக இருந்தார். மங்களூரில் அவரை வரவேற்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெறுகிறது.  ஆனால் அவருடைய அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு டில்லிக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்று விட்டார்.  சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவருக்கு டில்லியில் இருந்து அழைப்பு வந்ததாகவும் அதனால் பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டதாகவும் கேரள பா ஜ க தெரிவித்துள்ளது.

கேரள பா ஜ க தலைவர்களிடையே உள்ள உட்கட்சி பூசலினால் அமித் ஷா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அதனால் தான் தனது பயணத்தை உடனடியாக முடித்துக் கொண்டு டில்லிக்கு திரும்பி விட்டதாகவும் பெயர் தெரிவிக்க விரும்பாத பா ஜ க பிரமுகர் கூறி உள்ளார்.