டில்லி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிந்துக் கொண்ட பிறகு மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா குஜராத், தெலுங்கானா, தமிழ்கத்துக்கு ஆய்வுக் குழுவை அனுப்பி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15 முதல் மே மாத்ம் 3 ஆம் தேதி வ்ரை நீட்டிக்கப்பட்டது.  ஆயினும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.  இதற்கு முக்கிய காரணம் மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றாததே காரணம் என கூறப்பட்டது.  அதையொட்டி மத்திய அர்சு மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு ஆய்வுக் குழுவை மத்திய அரசு அனுபி வைத்தது.

இதில் மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க அரசு தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஆய்வுக் குழுவின்ர் புகார் அளித்தனர்,  இது குறித்து மம்தா பானர்ஜி, “மத்திய அரசு தெரிவித்த தினத்துக்கு சில தினங்கல் முன்பே மேற்கு வங்கத்துக்கு ஆய்வுக் குழு வந்துள்ளது.  இதனால் எங்களால் குழுவுக்கு போதிய அளவு ஒத்துழைப்பு அளிக்க முடியவில்லை.

தவிர மத்திய அரசு குஜராத், தெலுங்கானா மற்றும் தமிழ்கம் ஆகிய மாநிலங்களில் அதிக அள்வில் பாதிப்பு உள்ளதாக அறிவித்தது   ஆனால் அங்கெல்லாம் ஆய்வுக் குழுவை மத்திய அர்சு அனுப்பவில்லை.  மாறாக மேற்கு வங்க மாநிலத்துக்கு குழு அனுப்பப்பட்டுள்ள்து   உத்திரப் பிரதேசத்துக்கோ குஜராத் மாநிலத்துக்கோ ஏன் ஆய்வுக் குழு அனுப்பவில்லை?” என மத்திய அரசை கடிந்துக் கொண்டார்.

அவர் இவ்வாறு கடிந்துக் கொண்ட பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத், தெலுங்கானா, மற்றும் தமிழகத்துக்கு ஆய்வுக் குழுககளை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.