அமித்ஷா கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்

Must read

டில்லி

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பிலிருந்து பூரண குணம் அடைந்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

அவர் டில்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் தற்போது முழுவதுமாக குணம் அடைந்துள்ளார்.

அவருடைய சமீபகால கொரோனா பரிசோதனையில் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளது உறுதி ஆகி உள்ளது.

அவர் இதை தனது டிவிட்டரில் பதிந்து கடவுளுக்கும் தம்மை வாழ்த்தியவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேதாந்தா மருத்துவமனையில் தமக்குச்சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் உள்ள பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி அமித்ஷா தனிமையில் இருப்பார்.

More articles

Latest article