டில்லி
எட்டு மத்திய அமைச்சரவைக் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு அனைத்திலும் அமித்ஷா இணைக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக புதிய அமைச்சரவை அமைத்துள்ளது. இந்த் அமைச்சரவையில் பாஜக தேசிய தலைவரான அமித்ஷா இடம் பெற்றுள்ளார். அவருக்கு உள்துறை அமைச்சரவை ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது முக்கியமாக உள்ள 8 அமைச்சரவைக் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதாவது நியமன அமைச்சரவை குழு, வீட்டு வசதி அமைச்சரவை குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, பாதுகாப்பிற்கான அமைச்சரவை குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டு அமைச்சரவை குழு ஆகியவை மாற்றியமைக்கப்பட்டு உள்ளன
இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களிலும் அமித் ஷா இடம் பெற்றுள்ளார். இதைத் தவிர பிரதமர் மோடி ஆறு குழுக்களிலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 குழுக்களிலும் ரெயில்வே அமைச்சர் புயூஷ் கோழ் ஐந்து குழுக்களிலும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு குழுக்களிலும் உள்ளனர்.