டெல்லி: டெல்லியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், தலைநகர் டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது.
குறிப்பாக டெல்லியில் 12 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. இந் நிலையில் டெல்லியில் அதிகரித்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுவரை கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.