சென்னை :
இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா, தமிழக பா.ஜ.க, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்து தொகுதியிலும் தோற்றுப்போனது.
ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அமீத்ஷா, ‘ வெற்றி வாய்ப்பு உள்ள 50 முதல் 60 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்துமாறு பணித்துள்ளார்.
அவரது ஆணைக்கு இணங்க குறிப்பிட்ட 60 தொகுதிகளை கண்டறித்துள்ள பா.ஜ.க., அவற்றில் கவனம் செலுத்தும் என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய இரு மாவட்டங்களில் குறைந்த பட்சம் மூன்று தொகுதிகளை அ.தி.மு.க.விடம் கேட்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எஞ்சிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள பா.ஜ.க.. அந்த தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளது.
– பா. பாரதி