புதுடெல்லி:
கடும் நிதி நெருக்கடி காரணமாக குறைந்தபட்ச பென்ஷன் தொகையை இரு மடங்காக உயர்த்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முடிவு செய்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 60 லட்சம் பேர் உள்ளனர். வருங்கால வைப்பு நிதி தொகை தற்போது மாதந்தோறும் ரூ, 1,000 பிடித்தம் செய்யப்படுகிறது. கடும் நிதி நெருக்கடி காரணமாக இந்த தொகையை 2,000-ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது.
மொத்தமுள்ள 60 லட்சம் பேரில் 45 லட்சம் பேருக்கு மாதந்தோறும் ரூ.2,000 பிடித்தம் செய்யப்படும்.
பென்ஷன் தொகை இரட்டிப்பாக உயர்த்துவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும்.
தேர்தல் நேரம் என்பதால் நிதி ஒதுக்கீடு செய்ய கோர முடியாது. எனவே பென்ஷன் தொகையை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.