சமீபத்தில் பியூ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் மக்களிடம் “உங்கள் வாழ்நாளிலேயே எந்த அதிபர் சிறந்த வேலையை செய்துள்ளதாக நினைக்கின்றீர்கள்” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதிகப்படியான மக்கள் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவையே தேர்ந்தெடுத்துள்ளனர்.
கடந்த புதன் கிழமை வெளியான இந்த கணக்கெடுப்பில் 44% சதவீத அமெரிக்கர்கள் ஒபாமாவை சிறந்த அதிபராகவும், இரண்டாவது சிறந்த அதிபராகவும் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் 31% மக்கள் தங்கள் வாழ்நாளிலேயே ஒபாமாதான் சிறந்த பிரதமர் என்றும் கூறியுள்ளனர்.
தற்போதய அதிபர் டொனல்ட் டிரம்ப், பில் கிளின்டன் மற்றும் ரானல்ட் ரேகனுக்கு பிறகு நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கணக்கெடுப்பில் 20% மக்கள் மட்டுமே ஒபாமாவை சிறந்த மற்றும் இரண்டாவது சிறந்த அதிபராக தேர்ந்தெடுத்திருந்தனர்.   இதனால் பியூ ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு தலைமுறைக்கும் தரவரிசை மாறுவதாக குறிப்பிட்டுள்ளது.
வயது முதிர்ந்த அமெரிகர்கள் ரானல்ட் ரேகனை சிறந்த மற்றும் இரண்டாம் சிறந்த அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர். 54-72 வரையிலான மக்கள் 42 சதவீதமும் 73-90 வயதுடையவர்கள் 38 சதவீதமும் ரேகனை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஜனநாயக கட்சி மற்றும் ஜனநாயகத்தை சார்ந்து சுதந்திரமாக இருக்கும் மக்கள் 71% ஒபாமாவை சிறந்த மற்றும் இரண்டாம் சிறந்த அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர். 49 சதவீதத்துடன் பிள் கிளிண்டன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பெரும்பாலான குடியரசு  கட்சியினரிடையில் ரேகனே சிறந்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 57% குடியரசு கட்சியினர்  தங்கள் வாழ்நாளிலேயே ரேகன் தான் தாங்கள் கண்ட சிறந்த அதிபர் என்றும், 40% குடியரசு கட்சியினர் டிரம்பையும் தேர்ந்தெடுத்துள்ளனர். குடியரசு கட்சியினரிடையே டிரம்ப் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.